"ஜோக்கர் என்பார்கள். கிங் மேக்கர் என்பார்கள். பதவியில் இருந்தாலும், இல்லாது போனாலும் இந்திய அரசியலில் லாலு ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பிகாரின் பின் தங்கிய கிராமம் ஒன்றில், பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்த லாலு, பிகா ரின் முதல்வரானது சாதாரண விஷயமல்ல. அவரது ஜாதி அரசியல், சாமர்த்தியக் காய் நகர்த்தல்கள், கூட்டணி பேரங்கள், கவிழ்ப்பு சூழ்ச்சிகள், மெகா ஊழல்கள் அனைத்தும், அனைத்துமே இன்றைக்கு நாடோடிக் கதைகள் போல் இந்திய அரசியல் சரித்திரத்துடன் இரண்டறக்கலந்து விட்டன. லாலுவைப் புரிந்துகொண்டால் சமகால இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேரையுமே புரிந்துகொண்டுவிடுவதற்குச் சமம். விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் திடுக்கிடும் திருப்பங்களும் மிகுந்த லாலுவின் வாழ்க்கை, தமிழில் ஒரு நூலாக வெளிவருவது இதுவே முதல்முறை. "
Be the first to rate this book.