வாழ்வில் நம்மையும் மீறி நிகழும் நமது பிழைகளை எல்லாம் எழுத்தின் வழியாகத்தான் கடந்துவர முடிகிறது. இந்த உலகத்துடனான அத்தனை பரிமாற்றங்களையும் ஒரு கதைசொல்லி கதைகளின் வழியாகவேதான் நிகழ்த்துகிறான். 'கலை என்பது பிரச்சனையைச் சுற்றி எழுப்பப்படும் புனைவே' என்கிறார் சார்த்தர். இந்தத் தொகுப்பின் கதைகளும் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் சமகாலத்தில் எதிர்கொண்ட உண்மைகளைச் சுற்றி எழுப்பப்பட்ட புனைவு இக்கதைகள். தொடர்ந்து எழுத வேண்டுமென்கிற தவிப்பு வேறு எந்த வகையிலும் அரசியல் ரீதியாக என்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்கிற நெருக்கடியிலிருந்துதான் உருவாகிறது. இச்சமூகத்தின் எல்லா பிரச்சனைகளுக்குள்ளும் நின்று என்னால் போராட முடியாமல் போகலாம். ஆனால் அவற்றைத் தொந்தரவு செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் அதிகாரத்தை, அது எந்த வடிவிலிருந்தாலும் தொந்தரவு செய்யவே எழுதுகிறேன். இவற்றில் சில கதைகள் முழுமையடையாமல் கூட போகலாம்ஞ் ஆனாலும் நான் வெளிப்படுத்த நினைத்த குரல் அதன் ஆதார ஜீவனை நிச்சயமாய் விட்டுச் சென்றிருக்கும்.
- லஷ்மி சரவணகுமார்
Be the first to rate this book.