‘வேட்டைப் பறவையொன்றாகத் தன்னை வரித்துக்கொள்ளும் ஒருத்தன், தற்செயலை விரட்டிப் பிடிக்கத் துணிகிற பயணமே இந்நாவல். எல்லாவற்றையும் எழுதும் கரமாகத் தன்னை உணரும் அவன், இறுதியில் எதை அடைந்தான்? மலையுச்சியில் விடாமல் சுற்றும் தர்மசக்கரத்தை சுழல விடுவது யார்? அச்சக்கரத்தை விரட்டிப் பிடிக்க முயலும் இளைஞன் ஒருவனது பார்வையில் விரியும் இந்நாவல் இதுவரை சொல்லப்படாத களமொன்றைக் கட்டியெழுப்பியிருக்கிறது. வண்ணமயமான சித்திரங்களின் வழியாக அதிர்ஷ்டமென்பது குறித்து ஆழமான கேள்வி எழுப்புகிறது. சூதின் உச்சியைப் பார்க்கப் புறப்பட்ட அவனது பயணம் எந்தக் கூட்டில் நிறைவடைந்தது? புதிய சாளரத்தைத் திறந்து காட்டி இருக்கிறார் சரவணன் சந்திரன். லகுடானது தாழப் பறக்கிறது அங்கே.
Be the first to rate this book.