செறிவான ஒன்றுக்கொன்று தொடர்பற்ற கனவுகளின் உண்மை நிலை குறித்துப்பேசுவன இக்கவிதைகள் ஒருமிக்காத பிம்பங்களும், அவற்றின் விளைவுகளும் தொடர்ச்சியாக மற்றும் வித்தியாசமான சேர்க்கைகளில் தங்களை ஒன்றிணைத்து எழுச்சி வடிவங்களாக உருப்பெறுக்கின்றன நரனின் கித்தானில் (அல்லது) பிம்பவெளியில் ஆமையோடேந்திய துறவி; 13 நாள் சுற்றளவுள்ள பெண்; கருஞ்சாம்பல் பறவைகள் வெளியேறும் சிறுமியினது உடல் - இவர்களனைவரும் ஒரு நேர்கோட்டில் இறந்த காலம், எதிர் காலம் இல்லாது சதா சர்வமும் தற்கணத்தில் முகிழ்ப்பவர்களாக தொகுப்பின் கொஞ்சம் கவிதைகள் உத்தி, உரையாடல், சுய பிரலாபங்களற்ற நேர்மை (சுய தம்பட்டங்களற்ற நேர்மை) ஆகியவைகளால் நம்மைப் பெரிதும் ஆகர்ஷிப்பவை லாகிரி - வாதைகளின் விந்தைப் பிராந்தியம்.
- பாம்பாட்டிச் சித்தன்
நரனின் சமூக அரசியல் மொழி என்பது கவிதையின் அடி நீரோட்டமாய் இருந்தபடி மேற்தளத்தில் தன் பின் நவீனக் கூறுகளை அலையலையாக அடித்து நுரை விசிறிச் செல்கிறது. பிம்பங்களைச் சுழற்றிச் சுழற்றித் தட்டாமாலை சுற்றுகையில் அந்த சுழல் பிம்பங்கள் கவிதைக்குள் சுழன்றுகொண்டே இருக்கின்றன. அதனால் கவிதையில் பிம்பங்கள் தெரிவதில்லை. பிம்பங்களின் சுழற்சியை மட்டுமே வாசகன் உணர்கிறான். அந்த சுழற்சிதான் லாகிரியாக இந்த நூல் முழுக்க சுழன்று உள்ளிழுக்கிறது. இதுதான் நரன் என்ற கவிஞனின் தனித்துவம் என்று நினைக்கிறேன். சமகால தமிழ் இலக்கியச் சூழலில் சமூக, அரசியல் கவிஞர்களில் இன்றியமையாத ஒருவராக நரன் திகழ்கிறார்
வாழ்த்துகள் நரன்.
- ஸ்ரீபதி பத்மனாப
Be the first to rate this book.