இந்தப் புத்தகம் முழுவதும் லா. ச. ராவையும் அவர் எழுத்தையும், எழுத்தின் நோக்கத்தையும், நோக்கத்தின் பவித்திரத்தையும் வெளிக்கொண்டுவர முயற்சித்திருப்பதாக நம்புகிறேன். முடிந்தவரை லா.ச.ராவின் வார்த்தைகளில், லா.ச.ராவின் மொழியிலேயே சொல்லியிருக்கிறேன். லா.ச.ராவின் எழுபத்தி ஐந்து வருட எழுத்துப்பணிக்கு எனது வாழ்நாள் அஞ்சலி' இப்புத்தகம். நான் லா.ச.ராவின் எழுத்து வாரிசா? என்றால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் நான் லா.ச.ராவின் ரத்தவாரிசு என்பதைவிட எனக்குப் பெருமை வேறில்லை. லா.ச.ரா. சப்தரிஷி: இவர் 20 மே 1956ல் பிறந்தார். 1981 முதல் எழுதி வருகிறார். இவருடைய முதல் கதைத்தொகுதி பூமிக்குக் கிடைத்த புதையல்', லா.ச.ராவின் கதைத்தொகுப்புகள் நான்கும் வெளியிட்டுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகள், சினிமா விமர்சனம், பிரபலமானவர்கள் பற்றி, பயணக் கட்டுரைகள். சுற்றுலாத்தலங்கள் லேலண்டில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
Be the first to rate this book.