தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகின்றனர். அவற்றைத் தங்களோடு விளையாடப் பழக்குகின்றனர். அவை நோயுறும்போது கவலை கொள்கின்றனர். மாற்றாக அனைத்து விலங்குகளும் சிறுமிகளோடும் அவர்கள்தம் தாய் தந்தையரோடும் தங்களது விசுவாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி குதுகலித்துக் கொள்கின்றன.
Be the first to rate this book.