அமெரிக்க நாவலாசிரியரான சேலிஞ்சர் 1951ஆம் ஆண்டு “தி கேட்சர் இன் திரை” என்ற தனது முதல் நாவலைப் படைத்தார். அப்போது அவருக்கு வயது முப்பத்திரெண்டு. ஆங்கில நாவலில் அது ஒரு அற்புதம் என்று ஒரு விமர்சகர் எழுதினார். முதல் தரமான நாவல்கள் வரிசையில் இடம்பெறும் “தி கேட்சர் இன் தி ரை” பல மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது இதனை “குழந்தைகளின் ரட்சகன்” என்ற பெயரில், தமிழில் தந்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.
சர்ச்சைக்குரிய இந்த நாவல் பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது என்றாலும் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்ததால் இது அவர்களிடையேயும் பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 250,000 பிரதிகள் விற்பனையாகி வரும் இந்த நாவல் இது வரை 65 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிருக்கிறது.
Be the first to rate this book.