குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது.
குழந்தைகளிடம் எதிர்மறையாக எதையும் பேசாதிருப்பது, எதையும் செய்யாதே என்று ஆணையிடுவதற்குப் பதிலாக, இதைச் செய்தால் என்ன பயன்? இதைச் செய்தால் என்ன தீங்கு? என்று அவர்களுக்கு விளக்கிக் கூறுவது என பல விஷயங்களை நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த எவ்விதமாக அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்? என்பதையும் விளக்குகிறார். சிறப்பாக வளரக் கூடிய சூழல்களை ஏற்படுத்தினாலே போதும்; அந்தச் சூழல்களில் குழந்தைகள் தாமாகவே சிறப்பாக வளர்வார்கள் என்கிறார் நூலாசிரியர்.
காலங்காலமாக அனுபவஅறிவு சார்ந்ததாக இருந்த குழந்தை வளர்ப்பை, அறிவியல் அடிப்படையில் மாற்றியமைக்க வழிகாட்டுகிறது இந்நூல்.
Be the first to rate this book.