ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருதல் மிகக் கடினமான முக்கியமான ஒரு பணி. ஐந்து வயதுக் குழந்தையொன்று அம்மாவின் அழைப்பொலியைக் கூடக் கேட்காமல் தன்னையும்,தன் வயதையத்த குழந்தைகளையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை அவதானிக்கிறவர்களுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.
ஆறு வயதுக் குழந்தையைப் பள்ளிக் சிறுவனாக மட்டும் காட்டாமல் ஒரு வளரும் மனிதனாகக் காட்டுவது; இதற்கேற்றபடி ஒவ்வொரு குழந்தையின் உண்மையான வாழ்க்கை, மகிழ்ச்சி அதிருப்தி, தேவைகள், நாட்டங்கள்,திறமைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றைச் கவனத்தில் கொள்வதன் மூலமாக மட்டுமே இவனைப் புரிந்து கொண்டு ஒரு தனிநபர் என்ற வகையில் வளர்க்க முடியும் என்று காட்டுவது...’’ போன்ற அம்சங்களைத் தன் கடமைகளாக வரித்துக் கொள்கிறார் ஆசிரியர்.
15ஆண்டு கால அனுபவப் பின்புலமுடையவர். ஓராண்டு காலம் (ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தரப் பணியாற்றியபோது) 800பக்கங்களுக்கு விரிந்த நாட்குறிப்பின் அடிப்படையில் தயாரிப்பு வகுப்பின் முதல் நாள், 20ம் நாள், 84வது நாள், 122வது நாள், கடைசியாக170வது நாள் பணிப்பதிவுகளையே இந்நூலாக நம்முன் வைத்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் என் முறையை நான் மேம்படுத்த விரும்பினால்,நானும் ஒருசமயம் மாணவனாக இருந்தேன் என்பதை மறக்கக்கூடாது.
Be the first to rate this book.