எல்லா குழந்தைகள்போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்து பதினோரு வயதில், எப்படி குழந்தை உருவாகிறது? தாயின் வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்' உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகிவிடாதா? இப்படி பற்பல கேள்விகளை எழுப்பினாள்.
பலர் ஏதேனும் சமாதானம் சொல்லி இந்த கேள்வியை தவிர்த்து விடுவார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளிடையே தவறான தகவல் சென்று சிக்கல்கள் கூடும்.
அவர்களின் அறியும் ஆர்வத்தை மட்டுப்படுத்தாமல்; அதே சமயம் வயதுக்கு ஏற்ற முறையில் அறிவியல்பூர்வமாக மிக முக்கியமானதொரு கேள்விக்கான பதிலை இந்நூல் தருகிறது.
- த. வி. வெங்கடேஸ்வரன் (விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு)
Be the first to rate this book.