இன்றைய இயந்திர உலகில் குழந்தைகள் பற்றியும் அவர்களது மனச்சிக்கல்கள் பற்றியதுமான புரிதல் என்பது கானல்நீராகி வருகிறது. மனிதம் தழைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியும் குழந்தைப் புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும். மனிதமனம் பற்றிய முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டியது அத்தியாவசியத் தேவையாகிறது. இந்த நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெ.தூரன் எழுதிய குழந்தை மனம் மற்றும் மனித மனம் பற்றிய ஐந்து நூல்களின் தொகுப்பாக இந்நூல் மலர்கிறது. பொதுப்படையான உளவியல் கருத்தாக்கங்கள் மட்டுமன்றி ஃப்ராய்டின் கருத்து நிலைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், இளையோர் மற்றும் பெரியவர்களுக்கான உளவியல் வழிகாட்டியாக இந்நூல் விளங்குகிறது.
Be the first to rate this book.