உகாண்டாவில் பிறந்து இன்றைய தேதியில் டென்மார்க்கில் அகதியாக வாழும் சைனா கெய்ரெற்சி, வலி மிகுதியோடு நினைவடுக்குகளைக் கிளறி – ஞாபகத்திலிருக்கும் முதல் நிகழ்விலிருந்து தன் வாழ்வை மிக உக்கிரமாகப் பதிவு செய்திருக்கிறார், “குழந்தைப் போராளி’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலில். சில கணங்கள் மறக்கக் கூடாததாக நம்மில் தேங்கிவிடும் இல்லையா? சில நிகழ்வுகள் கடக்க முடியாததாக நம்மைத் தேக்கிவிடும் அல்லவா! முன்னூறு பக்கங்களில் அடங்கிய சைனா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கை, அப்படியொரு நிகழ்வாகவும் கணமாகவும் வாசிக்கிற யார் மனதிலும் காலத்திற்கும் அழியாமல் தேங்கிப் போகும். இனி, கொடுமையான பொழுதுகளை, துன்பியல் அனுபவங்களை, சகிக்க முடியாத அநீதிகளை சந்திக்க நேரும் போதெல்லாம் சைனாவின் வாழ்வு நினைவில் பாய்ந்து வலிமையோடு எதையாவது உணர்த்தும் என்பது உறுதி.
Be the first to rate this book.