இன்றைய மருத்துவ உலகில் சாத்தியம் இல்லாதது என்று எதுவுமே இல்லை. குழந்தை பெறுவதற்கான முறையான வைத்திய முறைகளை விவரமாக உங்களுக்குச் சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம்.குழந்தை பிறக்காத நிலை வரும்போது அந்த நிலையிலிருக்கும் தம்பதியரும் அவர்களின் பெற்றோரும் படும் வேதனைகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் இந்த சமூகம் அவர்களைப் படுத்தும் பாடும் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதவை.
அத்துடன் தம்பதியர் அறியாமையினால் தங்களுக்குள்ளேயே பிணங்கிக் கொள்வதும் ஒருவர் மேல் மற்றவர் பழி போட்டுக் கொள்வதும் வேதனை தரும் விஷயங்களாக இருக்கின்றன.தன்னுடைய குழந்தைச் செல்வங்களின் திருமணத்தை எவ்வளவு சிறப்பாகச் செய்து வைத்தாலும் பெற்றோருடைய கடமை அதன் மூலம் ஓரளவிற்குத்தான் பூர்த்தியடைகிறது.
தங்கள் மகன் அல்லது மகள் நடத்தும் இனிய இல்லறத்திற்குச் சாட்சியாக, அவர்களுக்குப் பிறக்கும் மழலைகளின் குரலைக் கேட்ட பிறகுதான் இவர்களின் கடமை முழுமையடைகிறது.
Be the first to rate this book.