திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டம், மிகவும் முக்கியமானது.
ஏனெனில், அந்த வயதுக்குள்தான் குழந்தை புரண்டு, தவழ்ந்து, உட்கார்ந்து, நடக்கப் பழகுகிறது. அந்தச் சமயத்தில், எது ‘நல்லது’, எது ‘கெட்டது’ என்று அந்தக் குழந்தைக்குத் தெரியாது. எது கையில் கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொள்வது, மூக்கில் போட்டுக்கொள்வது, குச்சியால் கண்ணைக் குத்திக்கொள்வது, தண்ணீர் என்று நினைத்து மண்ணெண்ணெய்யைக் குடிப்பது, வீட்டுக்குள் நுழைந்த பாம்பைக்கூட ஆபத்து என்று தெரியாமல் பிடிக்க முயற்சிப்பது என எத்தனையோவிதங்களில் குழந்தைக்கு ‘ஆபத்துகள்’ காத்துக்கொண்டிருக்கின்றன. பெற்றோராலும் எல்லா நேரமும் குழந்தையைக் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வகையில்,
குழந்தைக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் நேரலாம்?
பாதிப்பு ஏற்பட்டதன் அறிகுறிகள் என்னென்ன?
குழந்தைக்குச் செய்யவேண்டிய முதலுதவி என்ன?
பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது எப்படி?
என்பது உள்ளிட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவற்றுக்கான முதலுதவிச் சிகிச்சைகள் குறித்தும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். குழந்தைகள் உள்ள வீடுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம் இது.
Be the first to rate this book.