உலகக் கதைகள், இலக்கியங்கள், கலைகள் அனைத்தும் அன்பையும் அன்பாகிய நன்மைகளையும் சொல்லவே உருவாக்கப்பட்டன. கம்பனும் காளிதாசனும் வால்மீகியும் வியாசனும், நம் காலத்து எழுத்தாளர்களும் இதைத்தான் எழுதினார்கள்.
'பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர்' என்று அன்புக்கும், அன்பு வாழ்க்கையான நாகரிக வாழ்க்கைக்கும் இலக்கணம் சொல்கிறார் வள்ளுவர். 'என் தாய் மொழி, நாளை அழியும் என்றால் நான் இன்றே இறப்பேன்' என்கிறார் ரசூல் கம்சதேவ. நான் மறைகிறேன், இந்தியா சுதந்திரம் பெறட்டும் என்றார் பகத்சிங். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் மனம் வாடுகிறார் இராமலிங்கர். தன் பிள்ளைகள் படிக்க, ஓவர் டைம் செய்கிறார் ஒரு தொழிலாளி. தான் பட்டினி கிடந்து, குழந்தைக்குச் சோறு போடுகிறாள் தாய். அமுதமே கிடைத்தாலும் அதைத் தனியாக உண்ண மாட்டேன் என்கிறான் ஒரு சங்கப் புலவன்.
என்னால் முடிந்தது, இந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன்.
- முன்னுரையிலிருந்து
Be the first to rate this book.