ஒளிப்படக்கலை உலகம் எல்லையற்று பரந்து விரிந்து கிடக்கிற ஒரு கலைவடிவம். ஒளிப்படக்கலையை உணர்வதற்கும் நம் படைப்பாக்கத்திறன் கலந்து வெளிப்படுத்துவதற்கும் நம் வாழ்நாள் முழுவதுமான தொடர் இயக்கம் அவசியமான ஒன்று.அத்தகைய தொடர் இயக்கத்தில் குவியம் நூல் உங்களுக்கு உற்ற தோழனாய் இருக்கக்கூடும்.
எளிய தமிழில், ஒளிப்படக்கலை சார்ந்த புத்தம் புதிய தமிழ்ச் சொற்களின் உருவாக்கத்தில், 176 முழு வண்ணப்பக்கங்களில், 22 தலைப்புகளில், 100க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடனும் குறிப்பு ஓவியங்களுடனும் ஒளிப்படக்கலையின் முழுமையான புரிதலை நோக்கி முன் நகர்த்துகிற இலக்கோடு, குவியம் நூல் எழுதப்பட்டுள்ளது.
ஒளிப்படக்கலை சார்ந்த உங்கள் பயணத்தை, தீராக் காதலை, மேம்படலை தொடர் இயக்கத்தை, குவியம் விரைவுபடுத்தும், ஆழப்படுத்தும், உணர்தலை நோக்கி முன்நகர்த்தும். ஒளிப்படக்கலையை இறுகப் பற்றிக்கொள்ள உதவும்.
Be the first to rate this book.