வளர் இளம் பருவத்தினருக்குத் தம் இருத்தலைத் தாமே தேர்வு செய்யும் துணிவையும் சமகால அரசியல் அறிவையும் புகட்டும் குட்டி இளவரசன் இறுதியாகத் தன் குட்டிப் பூவை மீண்டும் உயிர்ப் பிக்கிறான். “அன்பின் வழியது உயிர்நிலை” எனும் மகாவாக்கியத்தின் வாயிலாக வாழ்வின் விளக்கத்தைப் பெறுகிறான்.
குட்டி இளவரசனின் குட்டிப் பூ குறுநாவலில் குட்டி இளவரசனைக் குழந்தைமை நிரம்பியவனாகவும் அதே சமயத்தில் சமகால வாழ்வை வளர் இளம் பருவத்தினருக்கும் விளக்கிச் சொல்லும் சமூக அரசியல் - சூழலியல் கூரறிவு நிரம்பியவனாகவும் உதயசங்கர் படைத்திருக்கிறார். சவால்கள் நிறைந்த வருங்காலத்தை நம்பிக்கையுடனும் சக உயிர்க்குலத்தின் மீதான வாஞ்சையுடனும் வளர் இளந்தலைமுறை வாழக் கற்றுக்கொடுத்திடத் தன் அந்துவான் விண்கலத்துடன் பயணிக்க குட்டி இளவரசன் அனைவரையும் வரவேற்கிறான்!
- முனைவர் கே.கணேஷ்ராம் (சுழலும் சக்கரங்கள், காஃப்காவின் நுண்மொழிகள், பத்து இரவுகளின் கனவுகள் உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்)
Be the first to rate this book.