ரஷ்ய சிறார் இலக்கியச் சிறப்பிதழ்
சிறந்த இலக்கியத்தைக் கொண்ட நாடு ரஷ்யா. உலக மனிதர்களுக்காக மிகச் சிறந்த புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. அதைப் போலவே குழந்தைகளுக்கும் நிறைய புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. குழந்தைகளுக்காக கணிதம், அறிவியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களை குழந்தைகள் நேசிக்கும்படி வண்ண ஓவியங்களுடன் வெளியிட்டு உள்ளது. அந்தப் புத்தகங்கள் சிலவற்றின் கதைகளையும், ஓவியங்களையும், அறிமுகத்தையும் இந்தக் குட்டி ஆகாயம் இதழில் நாம் பார்க்கலாம்.
விலங்குகளுக்கு உயிர் இருந்தாலும் நாம் அவ்வகையில் அவைகளை மதிப்பதில்லை. ஆனால் ரசோவ் என்ற ஓவியர் விலங்குகளை மனிதர்கள் போலவே சித்தரித்துக் காட்டியுள்ளார். அவரது சில ஓவியங்கள் உங்களது ஓவிய ஆர்வத்திற்காக இங்கே காத்திருக்கிறது.
நிக்கோலாய் நோசோவ் என்ற எழுத்தாளர் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதைசொல்லி. குழந்தைகள் பேசுவது போலவே பல கதைகளை விளையாட்டாகவும் மென்மையாகவும் எழுதியுள்ளார். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் சில ரகசியங்களைப் பற்றியும் நிறைய உரையாடல்களை வைத்திருப்பார்கள். இந்த இதழில் உள்ள நோசோவின் கதையோ இரண்டு சிறுவர்களுக்கு இடையே நடைபெறும் பொய்யான உரையாடலைப் பற்றியது. உங்கள் பொய்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ வைக்கும் அந்தக் கதையோடு மற்றப் பக்கங்களையும் அதே நேசத்தோடு வாசியுங்கள் நண்பர்களே…
சஹானா (எட்டாம் வகுப்பு)
சிறார் ஆசிரியர் குழு
குட்டி ஆகாயம் சிறார் இதழ்
Be the first to rate this book.