தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான் கடல் பரப்பில் ஓய்வெடுக்கவும் நீரருந்தவும் உடல் நனைக்கவும் இரை தேடவும் அந்தப் பறவைக்கு ஆதாரம்... உழைப்பையே மூலதனமாகக் கொண்டு தன் கனவு வானில் பறக்கத் துடிக்கும் குறுந்தொழில் முனைவோர்களின் உலகில் ஆக்கிரமிப்பவை ஓயவே விடாத வானமும் விழுங்கத் துடிக்கும் நீர்ப்பரப்புமே. தங்கள் கால்களில் நிற்கத்துடிக்கும் குறுந்தொழில் முனைவோரின் முன் நிற்கும் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ளப் போராடும் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியல் களத்தையும் கண்முன் விரிக்கிறது குற்றியலுகரம்.
Be the first to rate this book.