மதுரைப் பகுதியில் பிரமலைக் கள்ளர்களைக் குற்றப் பரம்பரையினராக பிரிட்டிஷ் அரசு அறிவித்ததில் ஒரு குழப்பம் பின்புலமாக இருந்தது. அது சாதியை வர்க்கமாக முடிவு கட்டியதால் ஏற்பட்டது. இதில், காவல்காரர் என்னும் அதிகாரத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு அவர்கள் அச்சுறுத்தலாக விலங்கியது மறைக்கப்படும். பிரமலைக்கள்ளர்களை எதிரிகளாக்கிக்கொண்ட குடியானவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்காமல், அதற்குத் துணை போகின்றவர்களாக மாறிய முரண் நிலையைக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு சாதிய அடையாள மீட்பிற்கான எத்தனிப்பாக மட்டுமே அது இல்லாமல், ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் சுயமரியாதை மீட்பிற்கான எத்தனிப்பாக அது இருந்ததால், எதிர் அடையாள அரசியல் பண்பு அதனுள் இருந்ததால், தமிழ்ச்சமூகம் அறிய வேண்டிய அந்தக் கிளர்ச்சியின் பதிவு அவசியம் என்று கருதினோம்.
Be the first to rate this book.