நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு அதிகாரி காவல்துறையில் எத்தகைய அனுபவங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகக்கூடும்? அவற்றை எப்படி அவர் எதிர்கொள்வார்?
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் நேர்மை, மனிதாபிமானம், துணிச்சல், கடின உழைப்பு ஆகியவற்றுக்குப் பேர்போனவர். தான் பணியாற்றிய விதத்தினால் மக்களாலும் சகாக்களாலும் மகத்தான நாயகனாகப் போற்றப்படுகிறார்.
சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் பல்வேறு சாதனைகள் புரிந்த அவர் பல்வேறு சோதனைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். 2022இல் வெளியான, ‘குற்றமும் கருணையும்’ நூல் அவரது சாதனைகளைப் பற்றிக் கூறியது. இந்த நூல் அவரது சோதனைகளைப் பற்றிப் பேசுகிறது. சோதனைகளை எப்படி அவர் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொண்டு அரிய பணிகளைச் செய்தார் என்பதைச் சொல்கிறது
Be the first to rate this book.