மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் கண்விழிக்கையில் நாவல் பிறந்திருக்க வேண்டும். நம்மிடம் முடிவற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேஸியொ அதனை ‘குற்ற விசாரணை’யை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.
1963இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது. ரெனெடோ இலக்கிய விருதை நாவலுக்கு அளித்து 23 வயது இளைஞரை உற்சாகப்படுத்தினார்கள். 2008இல் பெற்ற நோபெல் பரிசுக்குப் பிறகுங்கூட அவர் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் நாவல் ‘குற்ற விசாரணை’.
Be the first to rate this book.