பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்குப் பணியாத சுதேச அரசுகளை மரபான போர்களின் மூலம் வென்றடக்கிய பிறகு அதில் தப்பிய இனக்குழு மற்றும் பழங்குடியாட்சி குடிகளையும் அலை குடிகளையும் ஒடுக்க கண்டிபிடிக்கப்பட்ட சட்ட வடிவிலான போர்தான் குற்ற பரம்பரைச் சட்டம்.
இன்றைய சுதந்திர இந்தியாவில் போராளிகளை ஒடுக்க இயற்றப்பட்டிருக்கிற அத்தனை சட்டங்களின் தாய் வடிவம்தான் இச்சட்டம்.
இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்படாத இச்சட்டத்தின் கொடூர முகத்தை முதன்முதலாக உசிலம்பட்டி சாமிகருப்பத்தேவன்,உத்திரப்பிரதேசத்து பிஹாரி பார், மும்பையின் மகன்பிஹா உள்ளிட்ட இன்னபிற குற்றப் பழங்குடிகளின் மீது பிரிட்டிஷார் தொடுத்த நீதிமன்ற வழக்கு ஆவணங்களின் வழி அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
குற்றம் மற்றவரால் செய்யப்பட்டால் ஆறுமாத தண்டனையும் அதையே குற்றப் பழங்குடியினர் செய்தால் ஆயுள்தண்டனையோ, நாடுகடத்தலோ விதிப்பது என்று குற்றத்திற்கு தண்டனை என்பதாக இல்லாமல், அச்சமுகத்தில் பிறந்ததற்காக கூடுதல் தண்டனை விதிப்பது என்ற பழிவாங்கும் சட்டத்தை தோலுரித்திக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.
Be the first to rate this book.