மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.
கதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் பெறபடுவதில்லை வாழ்வியலோடு படைப்பாளியால் பரிசோதிக்கப்பட்டு வாசகனுக்கு தரப்படுகின்ற அம்சமாகும் நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வின் விசயங்களில் இருந்து கதை கருவை உருவாக்கி வாசகனுக்கு தருவது லேசுபட்ட விசயமல்ல அனுபவப்பட்ட மனிதர்களிடம் இருந்துதான் கதை கரு எடுக்க படுகிறது.
நான் ஒரு மனிதன் மனித தன்மையுள்ள எதையும் எனக்கு தொடர்பற்றதாக கருதவில்லை என்பது கார்ல் மார்க்சுக்கு மிகவும் பிடித்தமான வாசகம். வாழ்வில் காணும் சொற்ப அழகாய் மிகை படுத்தி பேரழகாய் காட்டும் போது அழகியல் வெற்றியடைகிறது.
மேலும் இப்புத்தகத்தில் கிராமிய வாழ்வின் அழகாய் பிரதி பலிப்பதொடு வேலாவின் கலை நின்று விடுவதில்லை அழகை உருவாக்கவும் செய்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலு, நம்மால் உணர முடிகிறது. அதிலும் கொடூரமும் மூர்கத்தனமும் நிறைந்த கள்ளர்கள் பற்றிய நாவலில் இதை உருவாக்குவதில் வேலாயுதம் வெற்றி பெற்றுள்ளார்.
Be the first to rate this book.