நவீனத் தமிழ் உரைநடைக்கு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் அடங்கியுள்ள சிறுகதைகளின் நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்பிரிக்கா, இலங்கை என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் மாறாமல் முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களைத் தமிழ் வாசகர் மனதில் நிறுத்துகின்றன. ஆசிரியருடைய புனைவின் நிழல் யதார்த்தத்தை மறைப்பதில்லை; அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது. அவரின் அனுபவங்கள் ஒரு மென்மையான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாகிவிடும் வித்தை திரும்பத் திரும்ப நிகழ்கிறது.
(2012இன் மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக ஆனந்த விகடன் விருதுபெற்ற நூல்)
Be the first to rate this book.