பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார்.
ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும் திகைத்து நிற்பதைச் சொல்வதே ‘குதிரை வேட்டை’ நாவலின் மைய ஓட்டம்.
Be the first to rate this book.