ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது. அப்பேச்சு மொழிக்கு இசைவான, நெருக்கமான ஓர் உரைநடை மொழியையே காமுத்துரை நாவல் முழுக்கக் கைக்கொண்டிருப்பது வாசிப்பின் சுவையைக் கூட்டுகிறது.
எப்பவும் எதையுமே காவியப்படுத்திவிடாமல் தெள்ளிய நீரோடை போல வாழ்வை எழுதிச்செல்லும் காமுத்துரையின் கை, இந்த நாவலில் தமிழில் இதுகாறும் பேசப்படாத ஒரு வாழ்வைப் பேசியிருக்கிறது.
- ச.தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.