துவாரகாபுரி வாசனாகிய கண்ணனது பாலிய நண்பரும் ஒரு சாலை மாணாக்கருமாகிய குசேல முனிவரது சரித்த்தை விரிவாக்க் கூறும் நூல் குசேலோபாக்கியானம் என்பது ஆகும். குசேலன் என்றால் பொலிவில்லாத ஆடையைத் தரித்தோன் என்பது பொருள்.உபாக்கியானம் என்றால் கிளைக்கதை.இதை எழுதியவர் வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவராவார். பாகவத்துள் கண்ணபிரானது திவ்விய வைபவங்களைக்கூறும் தசம ஸ்கந்தகத்தின் நடுவண் நிலவுவது குசேலரதுசரித்திரம். செவ்வைச்சூடுபவார் அதைச் செந்தமிழ்க் காப்பியமாக மொழி பெயர்த்தார். இது மூன்று அத்தியாயங்களை உடையது . குசேலர் மேல் கடல் அடைந்த அத்தியாயம். குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்த அத்தியாயம்.குசேலர் செல்வ நுகர்ந்து வைகுண்டமடைந்த அத்தியாயம்.
Be the first to rate this book.