த்தகங்கள் வாசிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை கையில் வைத்து நீண்ட நேரம் விரும்பிப் பார்ப்பதற்குமானவை. குழந்தைகளுக்கான புத்தகங்களில் ஓவியங்களுக்கும் வடிவமைப்பிற்கும் புத்தகத்தில் உள்ள வெற்றிடத்திற்கும் கதைகளுக்கு இணையான பெரும் மதிப்பு உண்டு. அத்தகைய உணர்விலிருந்து உருவான ரஷ்ய சிறார் கதைப் புத்தகங்களில் ஒன்றுதான் குருவிக்குஞ்சு. மக்சீம் கோர்க்கியின் அதிகம் அறியப்படாத ஒரு வேடிக்கையான கதை.
இன்னும் பறக்கத் துவங்காத ஒரு குட்டிக் குருவி தன்னைச்சுற்றி நிகழ்பவைகளைப் பற்றி அம்மாவிடம் பேசும் கதை. நாம் காணும் ஒவ்வொரு குழந்தையையும் போலவேதான் இந்தக் குட்டிக் குருவியும். மனிதர்களை கேலி செய்யும் துணிச்சலை ஒரு சின்னக்குருவிக்கும் வழங்கிவிடுபவனாக இருக்கிறான் கதைசொல்லி. மனிதர்களுக்கு சிறகுகள் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்தக் கதையில் வரும் குட்டிக்குருவியால். அது சிறகுகளைப் பற்றி நிறைய பேசுவதோடு சிறகில்லாத மனிதனைப் பற்றி விளையாட்டாகப் பாடவும் செய்கிறது.
மிகச்சிறந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல, அவை எல்லா மனிதர்களுக்குமானவை, மேலும் எக்காலத்திற்குமானவை. சின்னக் குழந்தைகளின் பேச்சையும் இயல்பையும் தனக்குள் வைத்துக்கொள்ள முடிந்ததாலேயே குருவிக்கூட்டத்தைப் போலவே இந்தக் கதையும் மக்களோடு பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறது. மக்சீம் கோர்க்கியின் கதைசொல்லலும் அதற்கு இணையான பூ. சோமசுந்தரம் மொழிபெயர்ப்பும் யெ. சருஷின் ஓவியங்களும் சின்னக்குருவியைப் பற்றிய இந்தச் சின்னக்கதையை நமக்குள் அப்படி வாழச் செய்கிறது.
Be the first to rate this book.