சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குருக்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் குறித்தும் பிராமணியம் என்னும் அந்நியச் சக்தி முதலில் முகலாயர்களுடனும், பின்னர் ஆங்கிலேயர்களுடனும் கரம் கோர்த்து இந்த மண்ணின் மக்களை எவ்வாறு அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில், அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட சுதந்தர இந்தியாவிலும் பிராமணிய சக்தி, இந்துத்துவம் என்கிற ஆயுதத்தின் மூலம் தொடர்ந்து மக்களை எவ்வாறு துன்புறுத்தி வருகிறது என்பதை நுணுக்கமாக ஆய்வு செய்கிறார்கள். அச்சக்திக்கு எதிராக அன்று குருநானக் தொடங்கிய போராட்டத்தை அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற பெருந்தலைவர்கள் தொடர்ந்து வந்ததையும், அதன் மேலாதிக்கம் சமகால தில்லி மற்றும் குஜராத் கலவரங்கள் வரை தொடர்வதையும், மேலும் இன்று பசுவுக்காக மனிதர்களைக் கொல்லும் அளவுக்கான கொடூர வடிவத்தை அடைந்து இன்றும் பேருருக்கொண்டு அச்சக்தி தொடர்ந்து நாட்டு மக்களிடையே பிரிவினைகளையும் பல்வேறு வகையிலான பாதிப்புகளையும் உண்டாக்குவதை நூலின் பிற்பாதியில் விவரிக்கிறார்கள்.
Be the first to rate this book.