கிளாரா...
உனது பெயர் விடுதலைக்குப் போராடுகின்ற பெண்களுக்குப் புதிய உத்வேகத்தைத் தரும். உனது பெயர் திரிபுவாதிகளின் நெஞ்சை வெடித்துச் சிதறச் செய்யும். சுரண்டப்பட்ட மக்களின் விடுதலையில் தான் பெண் விடுதலை அடங்கியிருக்கிறது என்று சொன்னாய்! சக தோழர்களிடமுள்ள தந்தைவழி சிந்தனையை எப்படிப் போக்க வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டினாய்.....
கிளாரா...
எங்களின் வழிகாட்டியே!
"பரந்துபட்ட பாட்டாளி வர்க்க மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஆண் தொழிலாளர்மீது வைத்த அக்கறையை பெண் தொழிலாளர் மீது வைக்கவில்லை என்றால் அது பாட்டாளி வர்க்க இயக்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பாகும்."
இந்த உனது வார்த்தைகள் எங்களது காதுகளில் ரீங்காரமிடும் போதெல்லாம் உனது உன்னதமான் புரட்சிகர வாழ்வின் வெளிச்சத்தையே எங்கள் இலட்சியத்தின் திசையாக்க் கொண்டு அப்பாதையில் உறுதியாகத் தெளிவாகப் பயணிப்போம். உனது இலட்சியக் கனவுகளை நிறைவேற்றுவோம்.
Be the first to rate this book.