வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே.
அன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், வேள்விகள். ஊழுக்கு எதிராக ஒருபக்கம் அன்னையரும் மறுபக்கம் மெய்ஞானியும் துயரமும் கனிவுமாக நின்றிருக்க அது எறும்புகளை அறியாத யானை என நடந்து செல்கிறது.
குருதிச்சாரல் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினாறாவது நூல்.
Be the first to rate this book.