1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் வந்த மத்திய இந்திய அகதி முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டபோது நோய்களாலும் அவர்கள் மீதான அரசின் பொருளாதாரத் தடையால் உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டாலும் அரசாங்கத்தால் ஏவப்பட்ட காவல்துறையினரால் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையாலும் நிறைய அகதிகள் கொல்லப்பட்டனர். மரிச்ஜாப்பி படுகொலையில் உயிர்பிழைத்த சில அகதிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரம்வரை இருக்கக்கூடும் என்று கூறும்பொழுது அரசாங்க அதிகாரிகளோ இந்த எண்ணிக்கை பத்துக்கும் குறைவானது என்றே வலியுறுத்துகின்றனர். இத்தனை மக்களும் அத்தீவிலிருந்து எப்படி மறைந்தார்கள்? சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் மிக மோசமான வன்முறை ஒன்றைக் குறித்த உண்மை விபரங்களை எவ்வாறு மீட்டெடுப்பது? பத்திரிகையாளர் தீப் ஹல்தர் 1979-ஆம் ஆண்டு நடந்த படுகொலையின் புதைக்கப்பட்ட வரலாற்றை அதில் தப்பிப்பிழைத்தவர்கள், அப்போதைய பத்திரிகையாளர்கள், அரசாங்க அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்களை நேர்காணல் புரிந்து அவ்வரலாற்றை தைரியமாகவும் நேர்மையாகவும் பரிவுடனும் மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
Be the first to rate this book.