குடும்ப வகையறா சார்ந்த குடும்ப தெய்வங்களும், இனக்குழு சார்ந்த சிறு தெய்வங்களும், தொழில் சார்ந்த குறுஞ்சாமிகளும், ஜாதிய அடிப்படையிலான சாமிகளும் 'ஜனங்களின் சாமிகள்' என்னும் பட்டியலில் அடங்குகின்றன. காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன. மானுடவியல், நாட்டாரியல், பண்பாட்டியியல் சார்ந்த ஆய்வுகளில் இக்குறுஞ்சாமிகளுக்கு முக்கிய இடம் உள்ளது. இக்குறுஞ்சாமிகளுக்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தோண்டிப் பார்த்தால் நமக்கு அரிய பல வாய்மொழி வரலாற்றுச் சான்றாதாரங்களும் அழகிய பல நாட்டார் கதையாடல்களும் காணக்கிடைக்கின்றன.
Be the first to rate this book.