இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங்காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர்- காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதி தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டுகால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது? யாருக்குத் தெரியும்!
ஆறுதலாகி நிற்கிற சொற்களும், ‘என்னலே அம்பி மொகம் வாட்டமா இருக்கு என்ன சங்கதி?’ என்ற்உ முகம்பார்த்தே மனத்தைப் படித்துவிடுகிற ஓர்மையும், ‘நல்லா இரி’ என்று எல்லாரையும் வாழ்த்தும் மனசும் குடியிறுக்கிற அந்தக் காரைவீட்டுத் திண்ணையில் சனமெல்லாம் வந்தமர்கிறது. அங்கேதான் மனித மனங்களின், இருட்டும், ரகசியமும் இறக்கிவைக்கப்படுகின்றன. அவை ரகசியங்களாகவே நிலைத்துவிடுகின்றன.
- ஜீவா படைப்பகம்
Be the first to rate this book.