கடைவீதியில் பார்த்த ஒருவரின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமா என்று புருவத்தை சொறிந்தவாறே யோசித்த அனுபவத்தை நாம் எல்லோரும் எப்போதாவது கடந்துவந்திருப்போம். இதுபோன்ற பரிச்சயமற்ற சாயல்களை, சாயல்கள் என்ற தலைப்பில் மூன்று கவிதைகளை வேறு வேறு கோணத்தில் தொகுத்திருக்கிறேன். இன்னும் ஐந்து தொகுக்கக்கூடிய அளவிற்கு பல்வேறு மனிதர்களின் சாயல்களைப் பார்த்தவாறே நகர்கிறது வாழ்வு.
டூட்டிஃப்ரூட்டி ஐஸ்கிரீமை விரும்பி உண்ட பதின்மத்தின் பல நினைவுகளை, அவை நிறம் மங்கிப்போவதற்குள் எங்கேயாவது பதிவுசெய்துவிடவேண்டும் என்ற பதற்றம், என் முந்தைய மூன்று கவிதைத்தொகுப்புகளில் நிறையவே இருந்தது. அந்தப்பதற்றம் இன்னும் குறையாத காரணத்தால் இந்தத் தொகுப்பிலும் சில கவிதைகள் உண்டு.
Be the first to rate this book.