மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழுந்த பரபரப்புகளும் கண்டனங்களும் இன்று சரித்திரமாகிவிட்டன. சாகித்ய அகடமி பரிசு பெற்ற இ.பாவின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பானது என்பது இதன் இன்னொரு சிறப்பு.
இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகளை நான் இதற்கு முன் வாசித்ததில்லை. இந்த ஒரு புதினத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவரைப் பற்றிய கருத்தைச் சொல்வது எத்தனை சரியாக இருக்குமெனத் தெரியவில்லை. அனாயாசமான எழுத்தோட்டம் இப்புதினத்தில் இருக்கிறது. இ.பா.ஒரு தேர்ந்த கம்யூனிச வாதி என்ற எண்ணம் மேலெழுகிறது. இந்தப் புதினம் கம்யூனிசப் பின்புலத்தில் அமைந்ததால் கூட அப்படி இருக்கலாம். யதார்த்த நிகழ்வுகளை வைத்து, தர்க்க வாதங்களை நிகழ்த்தி, பல தத்துவார்த்தங்களையும் பேசுகிறது இப்புதினம்.
Be the first to rate this book.