இந்த உலகம் அனைத்துப் பொருட்களும் விற்கப்படும் சந்தை. வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனைகளின், மருந்துக் கம்பெனிகளின் சந்தைகளாக இருக்கிறார்கள். இளைஞர்கள் முதலில் கல்விச் சந்தையில். பின் வேலை வாய்ப்புச் சந்தையில். அதற்குப் பின் உண்மையாகவே திருமணச் சந்தையில். திருமண ஏற்பாடு நிறுவனங்கள் – மேட்ரிமோனி கம்பெனிகள் பற்றிய மிக அற்புதமான கதையோடு ஆரம்பிக்கும் இத்தொகுப்பு, கொரோனா ஊரடங்கு கால இரவொன்றில் மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு பெண்ணின் மனவோட்டங்கள் பற்றிய கதையோடு முடிகிறது.
ஹரிஷின் மற்ற இரு படைப்புகளைப் போலவே இந்தத் தொகுப்பும், அரசாங்க தனியார் நிறுவனங்களின் குமாஸ்தாக்கள் அறியாத முற்றிலுமொரு புதிய உலகைக் காட்டுகிறது. முதல் கதையை ஆரம்பிக்கும்போதே டிண்டர் என்றால் என்ன என்று கூகுளிட்டுப் பார்த்துக் கொண்டேன். பின்னரொரு கதையில் ஹிக்கி... ஆனால் இந்தக் கதைகள் ஹிக்கி செய்யும், பல ஜிபி அளவில் ஆபாசப்படங்கள் சேகரித்து, சுற்றுக்கு விடும் இளைஞர்கள், புகை பிடிக்கும், டிண்டரில் உலவும், ஒருவனைக் காதலித்துக் கொண்டு, மற்றவனோடு சுற்றும் இளம் பெண்கள் பற்றியவை மட்டுமல்ல.
- எழுத்தாளர் ச.சுப்பாராவ்
Be the first to rate this book.