தொழிற்சாலைகளில் பல அற்புதமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றோடு ஏகப்பட்ட அசுத்தங்களும் சேர்ந்துவிடுகின்றன. வேஸ்ட் என்று அவற்றை அழைக்கிறோம்.தவறான அணுகுமுறைகள், எண்ணங்கள். நேரத்தை விரயமாக்கும் வேலைமுறை, பலவீனம் என்று நமக்குள்ளும் ஏகப்பட்ட குப்பைகள் ஒளிந்துகிடக்கின்றன. கண்களுக்குத் தெரியாத அந்தக் குப்பைகளை வளரவிடுவதன் மூலம், நாம் சிறிது சிறிதாகச் சரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்களா?இந்தக் குப்பைகளை எப்படிச் சுத்தப்படுத்துவது என்பது இரண்டாவது கேள்வி. முதல் கேள்வி, எதெல்லாம் குப்பை என்பதை எப்படிக் கண்டறிவது?மூன்று நவீன ஃபார்முலாக்களை அளிக்கிறது ஜப்பான். முடா, முரா மற்றும் முரி. கசடுகளைக் கண்டறிந்து களைவதற்கு மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்தே மனத்தில் குப்பைகள் சேர்க்காமல் பார்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இவை கற்றுக்கொடுக்கின்றன. நடைமுறை உதாரணங்களுடன் கூடிய ஓர் எளிய நிர்வாகவியல் கையேடு.
Be the first to rate this book.