நமக்குள் பல நெடுங்காலமாக ஊறிப்போன குறைபாடுகள் மற்றும் அவற்றை திறமையாக கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த நூலில், மனோதத்துவ ரீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நூலை உருவாக்கியவர் ஒரு மனநல மருத்துவர் என்பதால், அவரது வாழ்வில் சந்தித்த பல அனுபவங்களை பல இடங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த கால துன்பங்களாலும், எதிர்கால பயங்களாலும் எந்த நுண்ணறிவையும் பெற்றுவிட முடியாது; மாறாக, இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுவதில் தான் வெற்றி இருக்கிறது என்பது குறித்து நம்மை ஞானிகளுடன் ஒப்பிட்டுள்ளது அருமை.
Be the first to rate this book.