ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்தை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வை அருளும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. கேப்பை, கம்பு இவற்றை மாவாக்கி முள்ளுருண்டை, கொழுக்கட்டை, அல்வா, பர்பி, இனிப்பு பண்டங்கள் மற்றும் கூட்டு, கிச்சடி, அவியல், துவையல், நவதானிய இட்லி, முடக்கத்தான் தோசை, அத்தி அல்வா, சிறுதானியங்களில் புட்டு, பாயசம், கூழ், பொங்கல், காலை உணவுகளை வரிசைப்படுத்தி, சோள மிக்சர், கொள்ளு ரசம், கருப்பட்டி பானம் பலவகையான பாரம்பர்ய உணவுகளை சமைக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது இந்த நூல்.
சிறுதானிய மற்றும் பெருந்தானிய, பழம்பெரும் அரிசி உணவுகள் சமைக்கத் தூண்டும் வகையில் படங்களுடன் இந்த நூல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். விதவிதமான பெயர்களில் அமைந்திருக்கும் இந்த உணவுகள் சிறுவர்களை ஈர்ப்பதோடு பெரியவர்களுக்கும் மாலைநேர உணவாக அமையும். சிறுதானிய உணவில் சமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் நல்ல வரப்பிரசாதம். நோயுற்றோர் மட்டுமன்றி, உணவு முறையை மாற்ற நினைப்பவர்களுக்கும், இந்த நூல் வழிகாட்டுவதோடு பாரம்பர்ய உணவு வகைகளை நம் கைக்குள் அடக்கிக் கொடுக்கிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற பாரம்பர்ய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்த வாசகிகள், பாரம்பர்ய உணவுகளின் செய்முறைகளை விளக்கி தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அந்த உணவு வகைகளை, புகைப்படங்களுடன் பரிமாறுகிறது இந்த நூல்.
Be the first to rate this book.