வேங்கை பதிப்பகம் மற்றும் குமரி இலெமூரியா உலகத் தமிழ் ஆய்வு மையம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடான சு.கி. ஜெயகரனின் குமரி நில நீட்சி புத்தகத்திற்கு எதிர்வினையாக மிக அழுத்தமான சான்றுகளுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
அதேவேளையில் குமரிக் கண்ட ஆய்வில் தற்போதைய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து முழுமையான ஒரு ஆவணமாக திகழ்கிறது இந்நூல்.
ஆசிரியர் கூறுவதைப்போல வரலாற்று வரைவியல் வலிமைமிக்க ஒரு அரசியல் ஆயுதம் என்று தொடங்கும் இந்த நூலானது மிக அற்புதமாக உள்ளது.
பின்னிணைப்புகள் ஆறுடன் நல்ல வண்ணப் படங்களையும் கொண்ட இந்த நூல் குமரிக்கண்டத்தை பற்றி படிக்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூலாகும்.
குமரிமைந்தன் குமரிக் கண்ட ஆய்வில் மிக தெளிவானவர் என்பது அனைவரும் அறிந்ததே அந்த வகையிலே மிக அற்புதமாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.
புராணங்களிலிருந்தும் எவ்வாறு குமரிக்கண்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதும், தற்போதைய குழப்பவாதிகள் எவ்வாறு குழப்பங்களை மேற்கொள்கிறார்கள் என்பதையும் மிக அற்புதமாக விவரித்துள்ளார். 12 தலைப்புகளில் அற்புதமாக எழுதியுள்ளார்.
Be the first to rate this book.