நேபாளப் பயணத்தில் இருந்தபோதே நான் ஒவ்வொருநாளும் எழுதிய பயணக்கட்டுரைகள் இவை. தங்கும் விடுதிகளில் பேருந்துப் பயணங்களில் மலைப் பயணங்களில், கடும்குளிரில், தாளாத உஷ்ணத்தில் என அப்பயணம் தோறும் ஒவ்வொருநாளும் என் வலைத்தளத்தில் கட்டுரையைப் பதிவேற்றிக்கொண்டே இருந்தேன். நேபாள மலைப் பயணங்கள் தமிழில் பதிவாகியிருந்தாலும் லும்பினி, தங்க்கா ஓவியம், குமாரிக்கடவுளை நேரடியாகச் சந்தித்த அனுபவம் விரிவாக தமிழில் இடம்பெறுவது இதுவே முதன்முறையென நினைக்கிறேன். அவ்வகையில் இப்பயணநூலை எழுதியதில் நிறைவை அடைகிறேன்./
- ம.நவீன்
Be the first to rate this book.