குமரப்பாவின் காலத்தில் முதலாளியம், சமத்துவத்தை உறுதி செய்வது குறித்து பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பொருளிய சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவை இரண்டும் பொருலாக்கமுறை (mode of production) பற்றிக் கவலை கொள்ளவில்லை. நுட்பவியல் முன்னேற்றங்களால் பெருகும் பொருளாக்கம் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வாகி விடும் என்று கருதப்பட்டது. அதாவது பொருளாக்கத்தில் முதலீடு + மூலப்பொருள் + உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்டனர். ஆனால் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. அத்துடன் 'பொருள் ஆக்க முறை' பற்றியும் அவர்கள் கவலைப் படவில்லை. ஆனால் குமரப்பா அந்த இரண்டு கூறுகளையும் கருத்தில் கொண்டார். இயற்கை வளங்கள் தொடர்ந்து கிடைப்பது அரிது என்றும், பெருமளவு பொருளாக்கம் தவறு என்றும் பெரும்பான்மை மக்களால்தான் பொருளாக்கம் ( not mass production, production by masses ) நடைபெற வேண்டும் என்றார் அவர்.
Be the first to rate this book.