இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் தேவதை கதைகளுக்கும் யதார்த்தவாத கட்டமைப்பிற்கும் இடையில் பயணம் செய்கின்றன. வாசகர் விரும்பும் எந்த வடிவத்தையும் அவர்களே உருவாக்கம் செய்யலாம். நாவல் அபூரணத்தைப் பற்றிய ஒரு கருத்தை அறிவுறுத்துகிறது. எதையும் ஒருபோதும் முடிக்க முடியாது, கதைகள் முடிவதில்லை. எப்போது தோன்றுகிறதோ அங்கே நிறுத்திக்கொள்கிறோம். அதுபோலவே, இதுதான் சரியானது என்பது நீங்கள் எழுதும் நாவல் மட்டுமன்றி, எழுதக்கூடிய எல்லாவற்றிற்கும் ஒருபோதும் பொருந்தாது. சாதாரண வாசிப்பு வடிவத்திலிருந்து வெளியேற நாவல் முயற்சிக்கவில்லை. எழுத்தாளரால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளின் வரிசைக்கு கட்டுப்பட்டிருந்தாலும், ஒரு மிகை உரை பாணியில் நாவல் அமைந்திருக்கிறது.
கால்வினோவின் நோக்கம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? உண்மையில் ஒரு தொடக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு புத்தகத்தை எழுதுவது - ஏனெனில் வாசிப்பின் ஆரம்ப தருணம் மிகப்பெரிய பதற்றம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும். வாசகரின் ஒட்டுமொத்த கவனமும் அதில் பதிகையில் படிக்கப்படும் நாவல் சாத்தியமுள்ள அனைத்து நாவல்களின் வடிவத்தையும் எடுக்கக்கூடிய ஒரு நிகழ்வு.
இப்படியாக வாசிப்பு என்பது முதன்முறையாக எழுத்தை (எழுத்தாளரை!) மறுதலிக்கிறது. ஒரு நிபந்தனையற்ற மனநிலையில் மேலாதிக்கத்தை எடுத்துக் கொள்வதை உணரமுடிகிறது. 1979 இல் இந்நாவல் எழுதப்பட்டது, கால்வினோவின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. தமிழ் இலக்கியம் தொடாத உயரங்களை உணர்த்தும் வகையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் வருவது மகிழ்ச்சி.
- சரவணன் மாணிக்கவாசகம்
Be the first to rate this book.