தஞ்சை ப்ரகாஷ், க.நா.சு, வைக்கம் பஷீர், ச.தமிழ்ச்செல்வன், பொன்னீலன் உள்ளிட்ட படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் குறித்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் விமர்சனப் பார்வையை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கிற அதே நேரத்தில் தமிழ்நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் வாசகனுக்கு விளம்புகிறது. இதிலுள்ள தஞ்சை பெரியகோவில் ஒரு பொதுப்பார்வை’ என்னும் கட்டுரை ராஜராஜன் குறித்த மாற்று அரசியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கே உரித்தான இறுக்கமான மொழிநடை தவிர்க்கப்பட்டு வாசிப்பு சுவாரசியத்தின் உன்னதத்தை வாசகனுக்கு வழங்குகின்றன இக்கட்டுரைகள்.
Be the first to rate this book.