குடகர்கள் சிறந்த போர் வீரர்கள்; ஆனால் அவர்கள் தங்கள் நாட்டைத் தாங்களே ஒருபொழுதும் ஆண்டதில்லை. குடகு மன்னர்கள் அனைவரும் லிங்காயத்துகள். குடர்கர்கள் போர் வீரர்களாகவும், திவான்களாகவுமே இருந்திருக்கின்றனர்.
பிரிட்டிஷார் குடகர்களுக்கு சில சலுகைகள் அளித்தனர். குறிப்பாக, குடகர்கள் அனுமதி பெறாமலேயே கத்தியும் துப்பாக்கியும் வைத்துக் கொள்ளலாம். கத்தியும் துப்பாக்கியும் வைத்திருந்தும் கூட குடகர்களிடையே கொலை, கொள்ளை முதலியன இல்லை என்றே கூறலாம்.
விருந்தோம்பலில் சிறந்தவர்கள் குடகர்கள். விருந்துக்கு இன்றியமையாதது பன்றி இறைச்சி. குடகர்களிடையே பருப்பில்லாமல் கூட கல்யாணம் நடைபெறலாம். ஆனால், பன்றி இறைச்சி இல்லாமல் கல்யாணம் நடைபெறவே இயலாது. மது இல்லாமல் கல்யாணம் இல்லை. மதுவிலக்கு என்பது குடகைப் பொறுத்தவரை பெயரளவுக்குத்தான்.
Be the first to rate this book.