நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான் கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிசைப்படித் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள படைப்புகள், அவை வெளியான மூல இதழ்களோடு ஒப்புநோக்கப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிக் குறிப்புகளும் பின்னிணைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன.
இப்பதிப்பில் உள்ள நாடகங்கள் நிகழ்த்துகலையை மீறிய, பிரதியை முன்னிறுத்தும் வாசிப்புத் தன்மையுடன் திகழ்கின்றன. எல்லாக் காலங்களிலும் பெண் நிராகரிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கக் கொடுங்கோன்மையை இப்பிரதிகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேபோல இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் சங்கச்செவ்வியல் தொன்மையின் தன்மையுடன், நவீன வடிவங்களை இணைத்து ஒரு புதுவகை எழுத்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனையைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. மரபிலிருந்து பீறிட்டுப் பாயும் நவீனத்துவத்தின் உயிர்த்துடிப்பை இந்தூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம்.
Be the first to rate this book.