''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பனாகவும் விளங்கிய அர்ஜீனனை ஒரு பெரும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, 'இங்கே என்ன காண்கிறாய்?' என்று கேட்டாராம்.' அடடா! எல்லாமே நாவல் பழ மரங்கள்! எல்லா மரங்களிலும் கொத்துக் கொத்தாக எவ்வளவு நாவல் கனிகள்!'' என்று வியந்தானாம் பார்த்தன். உடனே, 'அருகே சென்றுபார் அர்ஜீனா' என்றாராம் கண்ணன். கிட்டே சென்று பார்த்த பாண்டவனுக்கு ஒரே பிரமிப்பு. உண்மையில் அங்கே அவன் பார்த்தது நாவல் பழங்களையல்லா! கொத்துக் கொத்தாகப் பல்லாயிரம் கிருஷ்ணர்கள்!
Be the first to rate this book.