ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட மன்னர்களில் ஒரு சிலரைத்தான் வரலாறு தன் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. அவர்களில் ஒருவர் கிருஷ்ண தேவராயர். முகலாயர்களின் பிடியில் சிக்கித் தவித்த தென்னிந்தியாவையும், அதன் மக்களையும் வாள்முனையில் மீட்டெடுத்த வரலாற்று நாயகர். மாபெறும் இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மாமன்னர். சிறந்த வீரர் மட்டுமல்ல, பரந்த மனப்பான்மையும் மத நல்லிணக்கமும் கொண்டவர். இன்றும் இலக்கிய உலகம் போற்றும் 'ஆமுக்த மால்யதா' என்னும் ஆண்டாளின் பக்தி சரிதத்தைக் காவியமாகப் படைத்த கவிஞர் இவர். வியப்புக்குரிய கிருஷ்ண தேவராயரின் வரலாறு, நதியோட்ட நடையில்.
Be the first to rate this book.